தலைமையும் கட்சியும் என்னை அவதானிக்கின்றது : சுகாதார அமைச்சர் !

அபு அலா 

a1_Fotor

கிழக்கு மாகாணத்தில் நிலவி வருகின்ற வைத்தியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் 100 வைத்தியர்களை நியமிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றேன் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

 

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் நேற்று (06) விஜயத்தை மேற்கொண்டு வைத்தியசாலையின் நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டு அங்கு நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்த பின்னர் மேற்கண்டவாறு கூறினார்.

a6_Fotor

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை எனக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சைத் தந்து அந்த அமைச்சினூடாக நான் என்னென்ன அபிவிருத்திகளை கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு செய்து வருகின்றேன் எனவும் அதனூடாக கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களில் வாழும் மூவின மக்களுக்கும் எனது அபிவிருத்திப் பணிகள் சரிவர முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவா என்று கட்சியும், கட்சியின் தலைமையும், மு.காவின் உயர்பீட உறுப்பினர்களும் எனது முன்னெடுப்புக்களை நன்கு அவதானித்து வருகின்றார்கள்.

நான் இந்த அமைச்சர் பதவியில் இருக்கும் காலம்வரை எனது கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் எவ்வித பங்கமும் வராதவாறு எனது அபிவிருத்திப் பணிகளை நான் சரிவர முன்னெடுத்து வருவேன். அந்த வகையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளை எல்லாம் நாம் மறப்போம், அந்த குறைபாடுகளை நான் செய்து தருகின்றேன்.

a7_Fotor

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிரின் கோரிக்கைகளுக்கமைய எதிர்வரும் புதிய ஆண்டில் இவ்வைத்தியசாலைக்கு மகப்பெற்று நிபுணர் ஒருவரையும், பற் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான புதிய உபகரணங்களையும் நான் வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன். அத்துடன் இங்கு நிலவுகின்ற ஆளணி பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களையும் எடுப்பேன் என்றார்.