ஏ.எல்.றமீஸ்
அட்டாளைச்சேனை ஆளம்குளம் பிரதேசத்தில் சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்புகை அமைச்சின் பத்து இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட கொங்கிரீட் வீதி மக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியின் பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்து வைத்தார்.