யுத்த குற்றங்களிற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் பிரிட்டன் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும் எனவும், புதுடில்லியில் உள்ள பிரிட்டனின் பாதுகாப்பு ஆலோசகர் இந்தவிடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவார் என இலங்கைக்கான பிரிட்டனின் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் தனது நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின் பாரம்பரியத்திற்கு தீர்வை காணப்போவதாக அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவில் அது தீர்மானமொன்றிற்கு இணை அனுசரனையை வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் இலங்கை இராணுவத்திற்கு முக்கிய பங்களிப்புள்ளது.
பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகரை நியமித்துள்ளதன் காரணமாக அது இலங்கை படையினருடன் இந்த விடயத்தில் இணைந்து செயற்படமுடியும்,என அவர் தெரிவித்துள்ளார்.