பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி நாலக்க கொடஹேவா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனது பதவிக் காலத்தில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்புக்கு 50 இலட்சம் ரூபா நிதி வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கான அவர் இன்று பொலிஸ் நிதி குற்றவிசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.
இதனையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்ய கடந்த 5ம் திகதி இவருக்கு பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த போதும், அவர் அன்றையதினம் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இன்றையதினம் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.