இந்தியா- பாகிஸ்தான் இடையே பாங்காக் நகரில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது !

இந்தியா பாகிஸ்தான் இடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடையே நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தீவிரவாதம், எல்லை பிரச்சனை, ஜம்மு – காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன. 

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் ஜிஞ்சுவா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 

nsaa-kFuD--621x414@LiveMint

முன்னதாக, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டுக்கான கூட்டத்தின் போது, பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடையேயான சந்திப்பு பெரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் ஒப்பந்தம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இந்த வாரம் பாகிஸ்தானில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இருப்பினும் காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து இந்த பேச்சுவார்த்தைக்கு சில விமர்சனங்களும் வந்துள்ளது.