தமது பின்னடைவுகளை மூடி மறைப்பதற்கான பலவீனமான முயற்சியேயன்றி வேறில்லை !!

 

 

அக்கரைப்பற்று தொடர்பில் ஹக்கீம் அதிரடி முடிவு… என வெளிவந்த செய்தி தவறானது
ஏ.எல்.மர்ஜுன் J.P

HAKEEM_Fotor_Collage_Fotor
அறியப்படாத நபர்களின் பேரிலும் அனாமதேய முகநூல் அடையாளங்களாலும் சில அரசியல்வாதிகள் தமது விருப்பங்களையும் ஆசைகளையும் பதிவிட்டு வருகின்றனர். இவை உண்மைக்குப் புறம்பானவையாகவும் அசிங்கமானதாகவும் அனாகரிகமானதாகவும் அமைந்திருக்கின்றன. இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் வெளிப்படுத்துவதன் மூலம் தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ளலாம் என இவர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

 

கடந்த 04.12.2015 வெள்ளிக்கிழமை ‘அக்கரைப்பற்று தொடர்பில் ஹக்கீம் அதிரடி முடிவு’ என்ற தலைப்பில் வெளியான செய்தியின் உண்மையான பின்புலத்தை தெளிவுபடுத்தவேண்டிய தேவையை அச்செய்தி எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

 

அக்கரைப்பற்றின் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து அவசரமான நேரடிக் கண்காணிப்பினை மேட்கொள்ளவேண்டிய தேவை இருப்பதை கட்சித் தலைமைக்குச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து கடந்த 02.12.2015 புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அக்கரைப்பற்று கட்சி முக்கியஸ்தர்களுடனான தீவிர கலந்துரையாடல் ஒன்று கட்சித் தலைவர் தலைமையில் இடம்பெற்றது. நானும் இதில் கலந்திருந்தேன். பாடசாலைகள் உட்பட அரச நிறுவனங்கள்மீது அனாவசியமான அரசியல் அழுத்தங்கள் அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருவது தொடர்பான ஆதாரங்களை தலைவரிடம் நாம் சமர்ப்பித்தோம். இவை உடன் நிறுத்தப்படாத விடத்து அக்கரைப்பற்று மக்களை மாத்திரமல்ல அக்கரைப்பற்றில் எமது கட்சியின் எதிர்காலத்தையும் அது பாதிக்கும் என்பதனையும் சுட்டிக்காட்டினோம்.

 

கலந்துகொண்ட கட்சி முக்கியஸ்தருள் சிலர் அக்கரைப்பற்றில் இவ்வாறான அரசியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவது குறித்து தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என இறுதிவரை வாதிட்டனர். அனைத்தையும் கேட்டறிந்த பின் பாடசாலைகளிலும் அரச நிறுவனங்களிலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலைமைகளுக்கு கட்சியின் அரசியலதிகாரத்தை நடைமுறைப்படுத்துகின்ற முறைமையிலுள்ள சிக்கல்களே காரணம். முதலில் கட்சி மத்தியகுளுவை விரிவாக்கம் செய்து வலுவூட்டி அமைப்பாளரின் தலைமையில் ஒழுங்குபடுத்தவேண்டும் எனவும், எதிர்காலத்தில் அமைப்பாளர் தலைமையிலான கட்சியின் மத்தியகுழுவின் ஊடாகவே அக்கரைப்பற்றில் கட்சியின் அரசியலதிகாரம் செயற்படுத்தப்படவேண்டும் எனவும் தலைமை வலியுறுத்தியது. இம்மாத இறுதிக்குள் அக்கரைப்பற்றுப் புதுப்பள்ளியடியிலுள்ள கட்சியின் மாவட்ட காரியாலயத்தில் கட்சி முக்கியஸ்தர்கள் சமூகநலன்விரும்பிகள் கட்சித் தலைவர் தலைமையில் ஒன்றுகூடி இருக்கின்ற மத்திய குழுவுடன் புதியவர்களையும் இணைத்து மத்திய குழுவினை அமைப்பாளர் தலைமையில் விரிவாக்கம்செய்து அதனிடம் அதிகாரம் அளிக்கப்படும் என்ற தீர்மானம் எட்டப்பட்டது. அமைப்பாளருடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஒத்துழைக்குமாறு இந்நிகழ்வில் கலந்துகொண்ட  ஆரிபீனுக்கு தலைவர் குறிப்பிட்டார்.

 

உண்மை இவ்வாறிருக்க முற்றிலும் முரண்பாடான செய்தியொன்று குறித்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்துகொண்ட ஆறு கட்சி முக்கியஸ்தர்களுள் எவருமே இச்செய்திக்கு உரிமைகோரவில்லை. இது தொடர்பாக  ஆரிபீனை தொடர்புகொண்டு கேட்டபோது குரித்தசெய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் இதனைப் பிரசுரித்தவர்கள் தொடர்பாக தனக்கு எதுவுமே தெரியாது எனக் குறிப்பிட்டார்.

 

கடந்த 2011ம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது தான் நான் SLMC இல் இணைந்துகொண்டேன். அக்கரைப்பற்று மாநகரசபைக்கான அப்போதைய தேர்தலில் SLMC இன் வேட்பாளராகக் களமிறங்கினேன். அமைப்பாளர் ஹனீபா மதனியின் தலைமையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் சவால்களை நாகரிகமாகவும் பொறுமையுடனும் எதிர்கொண்டு இக்கட்சியை அக்கரைப்பற்றில் வளர்த்தெடுத்தோம். இன்று அக்கரைப்பற்றில் SLMC இன் அரசியலதிகாரம் சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அது அக்கரைப்பற்று மக்கள் விரும்பத்தக்கதாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

 

அக்கரைப்பற்றின் கட்சி அமைப்பாளர் பதவியில் எந்தச் சிக்கல்களுமே கிடையாது. ஒவ்வொரு ஊரிலும் கட்சி அமைப்பாளர் பதவி உண்மையான கட்சி விசுவாசிகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. நிந்தவூரில் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க சுகாதார அமைச்சருமான எம்.ரி. ஹசன்அலி அவர்களுக்கும், கல்முனையில் சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனையின் மேயருமான நிசாம் காரியப்பர்  அவர்களுக்கும், சம்மாந்துறையில் அம்பாரை மாவட்ட அபிவிருத்திச் குழுத் தலைவர் எம்.ஐ.எம். மன்சூர் (பா.உ) அவர்களுக்கும், அட்டாளைச்சேனையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது..

 

 கட்சிக்கும் சமூகத்திற்கும் விசுவாசமாக அல்லாஹ்வைப் பயந்து அதிகாரத்தை செயற்படுத்தும் ஒருவரிடம் அமைப்பாளர் பதவி இருப்பதை விரும்பாத சில தனிமனித அரசியல் பேர்வழிகள் நிலைமையைக் குழப்புவதற்காகவே இத்தகைய செய்திகளை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர். இது தமது பின்னடைவுகளை மூடி மரைப்பற்கான பலவீனமான முயற்சியேயன்றி வேறில்லை என்பதை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் பொருத்தமானவர்கள் உள்வாங்கப்பட்டு மத்திய குழுவினை விரிவாக்கம்செய்து அதனூடாக கட்சியின் அரசியலதிகாரம் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். அரசியல் அதிகாரம் துஷ்பிரயோகம்செய்யப்படுவதனால் விளையக்கூடிய சமூக சீர்கேடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. அரசியல் பழிவாங்குதல்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஈடுபடாது. நல்லாட்சிக்கான ஓர் அரசியல் கலாசாரத்தை அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் மிக விரைவில் உறுதிப்படுத்தும். அதற்கான முன்னெடுப்பினை மழுங்கடிக்க எடுக்கப்படும் இவ்வாறான முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்காது.

கெட்டவன் ஒருவன் ஏதாவது செய்தியை உங்களிடம் கொண்டு வந்தால் (அதனை உடனடியாக) நம்பிவிடாது தீர விசாரியுங்கள். (அல்குர்ஆன்)

ஏ.எல்.மர்ஜூன் – JP
இணைப்பாளர்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை
0773366558