வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். எனவே, அந்த மாகாணங்களை இணைத்து இணைந்த வடகிழக்கு மாகாணமாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
இந்தியா–இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இப்பிரச்சினை தீர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டு கையெழுத்தானது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனே இடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால் அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. மகிந்த ராஜபக்சே ஜனாதிபதி பதவி வகித்த போது இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்தார்.
இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தலைமையில் உருவான புதிய அரசு இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது.
இந்த தகவலை நிதி அமைச்சர் ரவி கருணாநாயகே அறிவித்தார். இதற்கு பொருளாதார பிரச்சினையை காரணமாக கூறியுள்ளார்.