உலக சமாதானத்திற்காக அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அனைத்து அணு ஆயுத ஒழிப்பு அமைப்பின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கடந்த 29ம் திகதி முதல் இன்று 5ம் திகதி வரை தம்புளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இலங்கை உட்பட்ட 13 நாடுகளின் 100க்கும் அதிகாமானவர்கள் கலந்து கொண்ட பயிற்சிப் பட்டறை ஒன்று இடம்பெற்றது.
உலகில் எந்த இடத்திலும் அணு ஆயுதம் வெடிக்கச் செய்வதை தடுக்கும் நோக்கம் கொண்ட இந்த அமைப்பில் இலங்கை உட்பட ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 185 நாடுகள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றன.