உலக ஹாக்கி லீக் பைனல் தொடர்: அரையிறுதியில் பெல்ஜியத்திடம் வீழ்ந்தது இந்திய அணி!

உலக ஹாக்கி லீக் பைனல் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் தோல்வியடைந்துள்ளது. 

fa1c015c-1b3b-4089-ba1d-cabfe51a3c85_S_secvpf

ராய்ப்பூரில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் பைனல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஜெர்மனி உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றன. காலிறுதியில் 2-1 என்ற கணக்கில் பிரிட்டனை தோற்கடித்து இந்திய அணி அரையிறுதியில் நுழைந்தது. 

முதல் அரையிறுதி போட்டியில், உலக சாம்பியன் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று ஏற்கனவே வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி மற்றும் பெல்ஜியம் அணிகள் இன்று மோதின. இந்தப் போட்டியில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதனையடுத்து இந்திய அணி 3-வது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் நெதர்லாந்துடன் மோத உள்ளது. 

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன.