gp.vk;.vk;.v.fhju;
ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் குறிக்கோள்கள் கொள்கைகள் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயார் செய்தல் அவற்றை அமுல்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான பிரதான கருவியாக வரவு செலவுத்திட்டம் உள்ளது. இவ்வாறு கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைகளத்தின் கணக்காளர் ஏ .உதயராஜன் தெரிவித்தார்.
இன்று(04.12.2015) காலை திருகோணமலை குளகோட்டான் மண்டபத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்ட தயாரிப்பு தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்தார்.
ஆசிய மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.சுபாகரன் ஆசிய மன்றத்தின் திட்ட அதிகாரி எம்.ஐ. எம். வலீத் ஆகியோருடன் உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் நிதிபிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த கணக்காளர் ஏ .உதயராஜன் மேலும் கூறுகையில் ..மேலும் திட்டமிடல் செயற்பாட்டின் முன்னேற்றத்தை கண்காணிப்புச் செய்து வித்தியாசங்களை கட்டுப்படுத்துவதற்குள்ள வினைத்திறன்மிக்க நிதி முகாமைத்துவ ஆவணமாகவும் வருடாந்த வரவு செலவுத் திட்டமே பயன்படுகின்றது.
குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களை அமைத்துருவாக்கும் சட்டங்களுக்கு அமைய வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்வதானது சட்ட ரீதியான தேவைப்பாடாகுமென்பதுடன் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயார் செய்யும் போது கவனமாகவும் சரியாகவும் ஏற்றுக் கொள்ளத்தக்கவாறும் அமுல்படுத்தக்கூடிய வகையிலும் மக்களின் பங்கேற்பு உபாய முறைகளின் அடிப்படையில் தயார் செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.
அதற்கமைய மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் 211 முதல் 217 வரையான பிரிவுகளின் மூலமும், நகர சபைகள் கட்;டளைச் சட்டத்தின் 178 (1) முதல் 179 வரையான பிரிவுகளின் மூலமும் பிரதேச சபைகள் சட்டத்தின் 168 ஆம் பிரிவினதும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய இந்த சட்டத் தேவைப்பாட்டை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு குறிப்பிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் நகர முதல்வர்கள் மற்றும் தலைவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்று பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள் தயார் செய்கின்ற வரவு செலவுத் திட்டமானது முறையான நிதி முகாமைத்துவமின்றி தயார் செய்யப்படுகின்ற வெறும் ஆவணமாக மாத்திரம் உள்ளதுடன் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற அல்லது மக்களின் எதிர்பார்ப்புகளை உச்சளவில் நிறைவேற்றக் கூடியவாறு இது தயார் செய்யப்படுவதாகத் தெரியவில்லை.
அது மட்டுமன்றி வரவு செலவுத் திட்டத்தின் மூலம் திட்டமிடப்படாத செலவினங்களைச் செய்வதனாலும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொகைகளையும் தாண்டி செலவினங்களைச் செய்வதனாலும் கணக்காய்வு வினாக்களுக்கு உட்பட முடியும்.
உள்ளூராட்சி மறுசீரமைப்பு பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சிபார்சுகள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான பங்கேற்புத் திட்டமிடல் மற்றும் வரவு செலவுத்திட்டத்தை தயார் செய்வது பற்றிய வழிகாட்டல் தொகுப்பு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தேசிய உள்ளூராட்சிக் கொள்கைக்கு அமைய தயார் செய்யப்பட வேண்டும்.