இலங்கைப் படையினரின் அறிவை விருத்தி செய்ய அமெரிக்காவின் உதவி பெற்றுக்கொள்ள நடவடிக்கை !

இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்குமாறு அமெரிக்காவிடம் கோரியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை சந்தித்த போது தாம் இந்தக் கோரிக்கையை விடுத்தாகத் தெரிவித்துள்ளார்.

maithri obama
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைப் படையினர் அமெரிக்காவில் பயிற்சி பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்குமாறு தாம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
அதி நவீன தொழில்நுட்பங்கள், தந்திரோபாயங்கள் தொடர்பில் இலங்கைப் படையினரின் அறிவை விருத்தி செய்ய அமெரிக்காவின் உதவி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.