யாழில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது !

யாழில் சட்டவிரோதமான முறையில் ஆடை விற்பனையில் ஈடுபட்டிருந்த இந்திய வியாபாரி ஒருவர் இன்று விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏழு பொதிகளில் ஆடைகளை கொண்டுவந்த இவர், யாழ் நகரில் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இந்திய வியாபாரி விசாரணைகளுக்காக யாழ். பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ள குறித்த நபர் இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.