ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர 700 துனிசியா பெண்கள் சிரியா சென்றனர்!

Unknown

ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர 700 துனிசியா பெண்கள் சிரியா புறப்பட்டு சென்றனர்.

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு தனிநாடு அமைத்துள்ளனர். தங்கள் இயக்கத்தில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை இணைத்து வருகின்றனர்.

அதற்காக ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்ற சமூக வலை தளங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களின் பிரசாரத்தில் மயங்கி ஏராளமானவர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

குறிப்பாக இளம்பெண்கள் பலர் ஆர்வமுடன் இணைகின்றனர். சிரியாவில் ரக்கா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையகம் இயங்கி வருகிறது. அங்கு செல்லும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு போர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் துனிசியாவை சேர்ந்த 700 பெண்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவலை துனிசியா பெண்களுக்கான மந்திரி சமீரா ஏமரை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மேலும் 700 பெண்கள் கைது செய்யப்பட்டு துனிசியா மற்றும் சிரியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.