ஜவ்பர்கான்-
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் உணவு கட்டளை சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு முரணணான முறையில் போலி லேபல்கள் இட்டு பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த ஏழு வர்த்தகர்கள் சுகாதார அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டதாக கல்லடி பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் எஜ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கல்லடி பிரதேசத்தில் பேக்கரிகள்இ சில்லறை விற்பனை நிலையங்கள் நொறுக்கு தீனிகள் விற்பனை செய்யும் கடைகள் மீதான திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.கைதானவர்களுள் பொதிசெய்யப்பட்ட பேக்கிரி பொருட்களை விற்பனை செய்த இரு வியாயாரிகளுக்கு தலா 5000 ரூபபாய் வீதம் 10000 ரூபாவை தண்மாக மட்டக்கள்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் விதித்தார்.
ஏனைய 5 பேர் மீதும் எதிர்வரும் ஜனவரி 29ம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.