இந்த முறை வரவு செலவு திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தத்துவத்திற்கும் கொள்கைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதனாலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அந்த வரவு செலவு திட்டத்தில் பண்டாரநாயக்க, மஹிந்த மற்றும் மைத்திரி ஆகியயோரின் சிந்தனைகள் உள்ளடக்கப்படவில்லை என்றும், அது ஜயவர்தன மற்றும் விக்ரமசிங்கவின் கூட்டிணைப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த வரவு செலவு திட்டத்தினூடாக அரிசி, தேயிலை, இறப்பர் தொழிலாளர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உட்பட்ட அனைத்து தரப்பினரும் ஏமாற்றப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதியையும் தவறாக வழிநடத்தி இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.