சுகாதார அமைச்சர் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகளுடன் விஷேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக அந்த சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு இதுவரை கிடைத்த சலுகைகள் மற்றும் நிவாரணங்கள் இம்முறை வரவுசெலவு திட்டம் மூலம் நீக்கப்பட்டுள்ளதாக இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கூடிய அவதானம் செலுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விரைவில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து தீர்வினைப் பெற்றுத் தருவதாக தெரிவித்தார் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.