ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
அதிபர் ஹாதி ஆதரவு ராணுவத்துக்கு சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் உதவுகின்றன. சவுதி அரேபியா தலைமையிலான நட்பு நாடுகள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலை மீது சவுதி அரேபியா போர் விமானங்கள் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் இத்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் காமிஸ் முஷாகித் நகரம் அருகேயுள்ள மன்னர் காலித் விமான படை தளத்தில் இருந்து பறந்து சென்ற சவுதி அரேபிய போர் விமானங்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு வீசி தாக்கியது.
அதில் பலியானோர் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறும் குண்டு வீச்சில் ஏமனில் 2500 பொதுமக்கள் பலியாகி இருக்கலாம் என மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் 5700 பேர் கொல்லப்பட்டிருக்கலாம். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் என ஐ.நா.சபை தகவல் வெளியிட்டுள்ளது.