அனைத்து விவசாய நிலங்களில் இருந்தும் உச்ச பயனைப் பெறுவது விவசாயிகளின் பொறுப்பாகும் !

 

 

அனைத்து விவசாய நிலங்களில் இருந்தும் உச்ச பயனைப் பெறுவது விவசாயிகளின் பொறுப்பாகும் என்று ஆரம்ப தொழில்துறை அமைச்சர் தயா கமகே தெரிவிக்கின்றார். 

images
தெஹியத்தகண்டி கமநல சேவைகள் நிலையத்தை மக்கள் மயப்படுத்தும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

தற்சமயம் பயிர் செய்துள்ள அனைத்து நிலங்களில் இருந்தும் உச்ச பயனைப் பெற்றுக் கொள்வதற்கான அபிவிருத்திகளை செய்வது விவசாயிகளின் கடமை என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார். 

அவற்றுக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் ஏனைய உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் ஒரு ஹெக்டெயர் நிலப்பரப்பில் சுமார் 8,000 கிலோகிராம் நெல் அறுவடை செய்யப்படுவதாகவும், எனினும் நமது நாட்டில் 4,500 கிலோகிராம் மாத்திரமே அறுவடை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும் ஒரு ஹெக்டெயர் நிலப்பரப்பில் 6000 அல்லது 6500 கிலோகிரமாக அதனை உயர்த்துவது இலகுவான விடயம் என்றும் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.