பாகிஸ்தானில் பலுகிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க நிறுவன விழாவில் அந்நாட்டு பிரதமர் நவாஸ் செரீப் கலந்து கொண்டார் அப்போது அவர் பேசினார்.
பலுகிஸ்தானுக்கு சுதந்திரம் வழங்க கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்களை ஒடுக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் நவாஸ் செரீப்பை வெறுப்பேற்றும் வகையில் கேலியும் கிண்டலும் செய்யப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் தனது கையில் ‘பலுகிஸ்தானுக்கு சுதந்திரம் வேண்டும்’ என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினார்.
இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அந்த நபரை போலீசார் இந்த அரங்கத்தில் இருந்து வெளியேற்றினர்.