உயர்நீதிமன்றத்தின் புதிய நீதியரசர் சத்தியப்பிரமாணம் !

உயர்நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக கங்கானிதந்திரி சித்ரசிறி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

1654577554Untitled-1
இன்று காலை பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நலின் ஜயலத் பெரேரா இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.