அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானம் அனைத்து வசதிகளையும் கொண்ட மைதானமாக அபிவிருத்தி செய்யப்படும் என
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டுஉபகரணங்கள் வழங்குதல் மற்றும் இளைஞர் கழகங்களை அபிவிருத்தி செய்யும்வேலைத்திட்டத்தை மக்களுக்கு அறிவுறுத்தும் இளைஞர் விளையாட்டு புத்துணர்வு வேலைத்திட்டம் இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுவருகின்றன.
இன்று அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில்ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும்கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமேக, பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம்,தவிசாளர் எம்.ஏ.அன்சில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான யூ.எம்.வாஹிட்,எஸ்.எம்.ஏ.கபூர்,எஸ்எல்.எம்.பளீல்உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும்லாகுகல ஆகிய பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்கள்பங்குபற்றிய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் இளைஞர் கழகம் வெற்றியீட்டியதுடன் இரண்டாமிடத்தை பொத்துவில் இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டது.
இளைஞர் கழகங்களுக்கு பிரதம மற்றும் கௌரவ அதிதிகளினால் விளையாட்டுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டத்தில் 04 இடங்களில் நடைபெற்றுள்ளன.