முஸ்லிம் சமூக நலன் பேணும் சுயாதிபத்திய அரசியல் அதிகாரம் வேண்டும் : எஸ்.எம்.சபீஸ் !

  அண்மைக்கால அரசியல் நகர்வுகளும் ஜனாதிபதியின் ஐரோப்பிய நாடுகளுக்கான பயணமும் பேச்சுவார்த்தைகளும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை தொலை தூரத்தில் இல்லை என்பதனை எடுத்துக் காட்டுகிறது அதற்க்கான முஸ்தீப்புக்களாக எதிர்க்கட்சி தலைமைப் பதவி சிறையில் அடைக்கப் பட்டவர்களின் விடுதலை போன்றவைகள் பறைசாட்டுகின்றன என நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினரான எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்.
safees
மேலும் அவர் கூறுகையில் இந்துலங்கா ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடகிழக்கு பிரிக்கப்படுவதற்கு சர்வேதேச நீதிமன்றத்தை நாடவேண்டும் என்ற நிலை இருந்தபோதும் அதன் இணைவு உரியமுறையில் நடைபெறவில்லை என்பதன் அடிப்படையிலேதான் வடக்கும் கிழக்குமாகப் பிரிக்கப் பட்டது இது இலகுவாக நடந்தேறுவதற்கு.இலங்கையுடன் தூரமாகிய இந்திய ஐரோப்பிய உறவும் நெருக்கமாகிய சீன உதவியும் மறைமுகக் காரணமாகும் ஆகவே இந்துலங்கா ஒப்பந்தமும் 13து அரசியல் அமைப்புச் திருத்தச் சட்டமும் இன்னும் அமுலில் இருக்கின்றது.
இது என் நேரத்திலும் அமுல்படுத்தப் படலாம் என்ற நிலவரம் இப்போது தலைதூக்கியுள்ளது காரணம் ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அழிப்பது புலம் பெயர் தமிழர் அமைப்பாக இருப்பதனால் இலங்கையின் ஆட்சி மாற்றத்தில் பெரும் பங்காற்றிய ஐரோப்பிய நாடுகளின் இலங்கைகையுடனான உறவு வலுவடைந்து வருகின்றமையும் இந்தியாவின் கரிசனையான வேண்டுகோளும் தீர்வினை துரிதப்படுத்தி உள்ளமையை மறுக்க முடியாது இந்நிலையில் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் தம் மக்களுக்கான தீர்வுப் பொதி என்ன என்பதனை முன் வைக்க வேண்டியது அவசியமாகும் .
முஸ்லிம்களின் அதிகளவான வாக்குகளைப் பெற்றவர்கள் நாங்கள்தான் எனக் கூறிக் கொள்ளும் தலைமைகள் எப்போதும் தன் இருப்பினைக் காப்பதற்கு சிங்கள சகோதரர்களோடு இணங்கி போகவேண்டி இருப்பதனால் கிழக்கு மக்களைப் பற்றி அவர்கள் சிந்திக்க மாட்டார்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும்போது கிடைப்பதனை எடுப்போம் என்ற முடிவில் முஸ்லிம் தலைமைகள் இயன்குவதுபோலவே தென்படுகிறது இது முஸ்லிம் மக்கள் மீண்டும் சிருபான்மைக்குள் சிறுபான்மையாக மாட்டி தத்தளிக்க வேண்டிய நிலைமையை தோற்றுவிக்கும் எனவே இந்தியாவில் இருப்பதுபோன்று மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் முன்வைத்தது மாதிரி நிலத்தொடர்பற்ற தென்கிழக்கு அழகு தோற்றுவிக்கபடுதலோ அல்லது சுயமாக அதிகாரம் வழங்கப்பட்டு உரிய மாகாணத்தை அம்மாகான மக்கள் ஆளுவதற்கான தீர்வுப் பொதி ஒன்றினையோ பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம் சமூகம் ஒற்றுமையோடு போராட வேண்டிய தருணத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்