எம்.ஐ.எம்.றியாஸ்
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் எற்பாட்டில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 1000 வறிய குடும்பங்களின் வீடுகளை முடிப்பதற்காக சீமெந்து பூச்சு வேலைத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் ஒவ்வெரரு குடும்பங்களுக்கும் தலா 10 சீமெந்து பக்கட்கள் வீதம் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம் அக்கரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 57 பயனாளிகளுக்கு சீமெந்து பக்கட்கள் வழங்கும் வைபவம் இன்று (03.12.2015) அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்டமண்டபத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நகர காரியாலய முகாமையாளர் ஏ.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் விவகார தொழில்வாய்ப்புத்துறை செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சீமெந்து பக்கட்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல்லத்தீப் கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நகர காரியாலய தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஏ.காலிடின் உட்பட உத்தியோகத்தர்கள் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.