எமது நாவிதன்வெளி பிரதேச மக்களின் மிகப்பெரிய குறைகளில் ஒன்றாக இருந்து வந்த பாதைகளின் பிரச்சினையை நிபர்த்தி செய்ய கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டுசெல்லும் வகையில் தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் சார்பில் கல்முனை தொகுதி இணைப்பாளராகிய நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டு சென்றிருந்தேன் . .
இதன் மூலம் சமூகம் விழித்தால் எமது மக்கள் பிரதிநிதிகளால் உறங்க முடியாது என்பது எம்மால் உணர கூடியதாக உள்ளதையும் இங்கு சுற்றிகாட்ட விரும்புகிறேன். எமது மனுவை ஏற்று உடனடியாக அமுல்படுத்த முன்வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்.இதனை மக்கள் கவனத்திற்க்கு கொண்டுசேர்த்த 40க்கும் அதிகமான ஊடக நிறுவனங்களுக்கும் இவ்வேளையில் தனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அத்துடன் இன்சா அல்லாஹ் தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் முழு முயற்சியால் மிக விரைவில் எமது 06ம் கொலனி பிரதேசத்தில் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை அமைக்க முழு முயற்சியுடன் இறங்கியுள்ளதையும் இவ்வேளையில் தெரிவித்துவைக்க விரும்புகிறேன்.என இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைக் கட்சியின் கல்முனை தொகுதி இணைப்பாளரும், அல்-மீசான் பௌண்டேசனின் கல்வித்துறைக்கான பிரதிப்பணிப்பாளருமான தாஹிர் முஹம்மது சபீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.