அஷ்ரப் ஏ சமத்
பொலிசாரின் சீருடையை பயண்படுத்தி தொலைக்காட்சி விளம்பரமான சோயா மீட் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதனை நடித்த இருவர்களுக்கு எதிராக இன்று(2)ஆம் திகதி கொழும்பு கோட்டை பொலிசில்; முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குனசேகர தெரிவித்தார்.
பொலிஸ் சட்ட திட்டத்திற்கமைய 80வது சர்த்துப்படி பொலிசார் சீருடையை பொலிசார் அல்லாத எவரும் அதனைப் பயண்படுத்த முடியாது. அவ்வாறு நாடகம், சீனிமா போன்றவற்றுக்கு பொலிஸ் சீருடையை காட்சிப்படுத்துபவர்கள் பொலிஸ் மாஅதிபரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருத்தல் வேண்டும். இல்லாவிடில் 3 மாதகாலத்திற்கு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.
காக்கி சீறுடையை அணிந்தாலும் அதில் பொலிஸ் இலட்சனை பொறிக்கப்பட்டிருந்தது.
இன்று(2) கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் –
கடந்த நவம்பர் மாதம் கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தன புர பிரதேச வீதிப்போக்குவரத்தை ஆகக் கூடுதலான பொலிசாhரை நிறுத்தி வீதிப்போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். 2014ஆம் ஆண்டில் வீதிப் போக்குவரத்தை மீறிய பாதாசாரிகள், சாரதிகள் 5 இலட்சம்பேருக்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். அவர்களுக்கு குற்றப்பத்திரிகைகளோ குற்றப்பணம் செலுத்தவோ பொலிசார் செய்ய வில்லை.
2015ஆம் ஆண்டு நவம்பர் 1 – 30 ஆம்திகதி வரை 13ஆயிரத்து 95 சாரதிகள் விதிப்போக்குவரத்தை மீறி அவர்களுக்கு வழக்கு மற்றும் தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. இதில் மோட்டர் சைக்கல்கள் – 1955, முச்சக்கர வண்டி 1970, கார் வேண் 2085, பஸ், பரவாகணங்கள் குற்றஙகள்;; 1998 ஏனைய வாகணங்கள் 142 ஆகும்.
இன்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சாஜன்ட் ஒருவர் 2015 ஆகஸ்ட் 10ஆம் திகதி 4.45 மணிக்கு காணமல் போயிருந்தார். பின்னர் பொலிஸ் தலைமையக குழு ஒன்று இவரைத் தேடுதல் வேட்டையில் மேற்கொண்டு இவர் மதவாச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் வவுனியா பொலிஸ் அதிகாரியின் தொல்பொருள் தோண்டிய குற்றத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் ஆவார். இவரது கையடக்கத் தொலைபேசியில் இவர் பெண் ஒருவரிடம் இறுதியாக 45 நிமிடம் பேசியிருந்துள்ளார். ஆனால் இவரது மனைவி தனது கணவரைக் காணவில்லை என ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்து பொலிசிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
மகியங்கனையில் 18வயது பெண் ஒருவர் தனது மாமாவின் வீட்டில் தங்கி அங்கு உள்ள காமண்ட் பெக்டறியில் வேலைசெய்து வநதுள்ளார். இவர் நேற்று முன்தினம் காணமல் போகியிருந்தார். இன்று காலை 07.45மணிக்கு அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கற்பளிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.