படையினர் வசம் இருந்த வீடுகளை மக்களிடம் கையளிக்க அரச அதிபர் உடனடித்தீர்வு!

புல்மோட்டை பொன்மலைகுடா அர்சிமலை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு  NEHRP திட்டத்தினால் வழங்கப்பட்ட வீடுகள் கடந்த 2010 ம் ஆண்டு காலபகுதியில் புல்மோட்டை கடற்படையினரால் ஆகிரமிக்கப்படுள்ளது குறித்த பகுதிக்குள் அறிசிமலை பெளத்த மத குருவால் சட்ட விரோத கட்டடம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டதுடன் உடனடியாக குறித்த பிரதேச செயலாளர் மற்றும் புல்மோட்டை போலீஸ் அதிகாரிக்கும் அரசாங்க அதிபரினால் கட்டட வேலைகளை நிறுத்த தொலைபேசியினூடாக பணித்ததுடன் குறித்த பாதிக்கப்பட்ட மக்களோடு 02.12.2015 ம் காலை 11.00 மணியளவில் திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் ஏற்பாட்டில் சந்தித்து விபரித்ததுடன் உடனடி தீர்வாக அரசாங்க அதிபரினால் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான கடற்படை கட்டளை தளபதிக்கு 02.12.2015 திகதி இடப்பட்ட கடிதம் மூலம் குறித்த பாதிக்க பட்ட மக்களுக்கு சட்ட ரீதியாக குறித்த பிரதேச செயலாளரிடம் கையளித்து பாதிக்க பட்டவர்களிடம் ஒப்படைக்கும்படி மிக அவசரமாக அனுப்பி வைக்க பட்டுள்ளது. 
குறித்த விடயம் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்க அதிபருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்தார்.
IMG_8928_Fotor IMG_8927_Fotor
IMG_8924-2 IMG_8930