மூதூரில் நாற்பது கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது!

  எப்.முபாரக் 

மூதூர் பிரதேச சபையினால் மூதூர் பிரதேசத்தில் கட்டாக்காலிகளாக உலாவித் திரிந்த 40 மாடுகளை  செவ்வாய்க்கிழமை(1) இரவு மூதூர் பிரதேச சபை ஊழியர்கள் பிடித்துள்ளனர்.

அதையடுத்து,இன்று புதன்கிழமை (3)ஒவ்வொரு மாட்டுக்கும் 1,300 ரூபாய் வீதம் அபராதம் விதித்து மாட்டு உரிமையாளர்களிடம் மாடுகளை ஒப்படைத்துள்ளதாக மூதூர் பிரதேச சபையின் ஊழியர் பீ.டீ.அஜ்மல் தெரிவித்தார்.

இதன்படி,1300 ரூபாய் தண்டப்பணத்தில் 1000 ரூபாய் மூதூர் பிரதேச சபைக்கும் 300 ரூபாய் கட்டாக்காளி மாடுகளை பிடிப்பதற்கு மூதூர் பிரதேச சபையினால் நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு தண்டப்பணம் விதித்தால் மாட்டு உரிமையாளர்கள் தமது மாடுகளை உரிய முறையில் கவனிப்பார்கள் எனவும் இதனால் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கட்டாக்காலி மாடுகள் மூதூர் நகர்,பெரியபாலம் ஆகிய கிராமங்களில் உலாவித் திரிந்த போது பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.