அக்கரைப்பற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு உதயம் !

சப்றின்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று கட்சிக் காரியாலயத்தில் அண்மையில் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தலைமையில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பின்வருவோர் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இளைஞர் காங்கிரஸ்
தலைவர் – ஏ.எச்.அனீப்
செயலாளர் – எம்.ஏ.அஸ்மத்
பொருளாளர் – எம்.ஏ.றாசிப்
உப தலைவர் – எம்.பி.றயீஸ்
உப செயலாளர் – எம்.ஏ.ஸஹீர் அஹமட்
உப பொருளாளர் – ஏ.ஆர்.வசீம்
ஊடகச் செயலாளர் – எம்.எல்.சரிப்டீன்
கலாசாரச் செயலாளர் – எம்.எம்.அன்சார்.

slmc akp

நிர்வாகக் குழு அங்கத்தவர்களாக எம்.எம்.எம்.அஸ்மி, ஆர்.நிஸாமுல் ஹசன், எம்.எம்.இர்ஷாத், ஆர்.சஹீட் அஹமட், ஏ.பாஹிம், ஏ.எஸ்.நௌசாட், ஏ.எம்.மனாஸ், எஸ்.எம்.கபீர், என்.ரீ.எம். பாயிஸ், ஏ.ஜி.சியாத், எம்.எச்.றியாழ் மற்றும் ஆலோசகராக அரசியல்துறைப் பட்டதாரி முஸ்னத் ஷரீப்தீன்;, போஷகர்களாக கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் இணைப்பாளர் ஏ.எல்.மர்ஜூன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

2YC_Fotor

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் அக்கரைப்பற்று அரசியலில் நல்லாட்சிக்கான அம்சங்களை வலுவூட்டுவதே நமக்கு முன்னுள்ள மிகப் பெரும் பணியாகும் என ஒன்றிணைந்து பிரகடனப்படுத்திக் கொண்டனர்.

3YC_Fotor