ஓட்டமாவடி அஹமத் இர்ஷாத்
நாட்டில் சகல மக்களுக்குமிடையே ஒற்றுமைப் பாலத்தினைக் கட்டி எழுப்புவதற்காக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று நல்லிணக்கம் தொடர்பான தேசிய கொள்கையொன்று வகுக்கப்படும் என தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரணாயக்க தெரிவித்தார்.
ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் பணிகள் பற்றி விளக்கி நடத்திய செய்தியாளர் மகாநாட்டிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் தன்னுடன் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அலுவலகத்தின் முக்கிய பணிகள் பற்றி திருமதி குமாரதுங்க விரிவாக விளக்கினார். இதன் பிரதான பணிகள் வருமாறு,
இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் வாழும் இலங்கையர்களை தேசிய ஐக்கியத்தையும் மீள் இணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் ஈடுபடுத்தல்.
சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதனூடாக ஒருமுகப்படுத்தப்பட்ட சமூகத்தை கட்டியெழுப்பல்.
மாவட்ட ரீதியில் அபிவிருத்தித் திட்டமிடல்கள் இணைக்கப்படுவதை உறுதிசெய்தல்.
ஒவ்வொரு இலங்கையரும் மொழியுரிமையை அனுபவிப்பதை உறுதிப்படுத்தல்.
சமூகங்களுக்கிடையிலான ஆற்றுப்படுத்தல் முறைமைக்கு ஆதரவளித்தல்.
பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தல்.
இளைஞர்களையும் சிறுவர்களையும் முன்னிறுத்தி தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணன்னத்தையும் கட்டியெழுப்பல்.
நிலங்கள் சரியான உரிமையாளர்களுக்கு மீள் அளிக்கப்படுவதை ஊக்குவித்தல்.
Video press meeting:- VIDEO