கடும் வரி விதிப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ.6500 கோடி திரட்டும் ஐ.எஸ். !

ஈராக் மற்றும் சிரியாவில் தனி நாடு அமைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் போட்டி அரசாங்கம் நடத்தி வருகின்றனர். தங்களது பகுதியில் வாழும் மக்களிடம் கடுமையான வரிகளை வசூலிக்கின்றனர்.

போக்குவரத்து வரி விதிக்கப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் நாட்டுக்குள் பொருட்களுடன் நுழையும் வாகனங்களிடம் மாதந்தோறும் 3 தடவை தலா ரூ.2 லட்சம் வசூலிக்கின்றனர். அதற்கு தங்களது அரசாங்க ‘சீல்’ பதித்து ரசீது தருகின்றனர்.

isis-flag

வரி தர மறுப்பவர்கள் கைது செய்யப்படுவர்கள். அல்லது அவர்களது வாகனம் சரக்குகளுடன் வைத்து எரிக்கப்படும். அரசு அலுவலக கட்டிடங்களை வாடகைக்கு விடுதல், வருமானம், தண்ணீர், மின்சாரம், கால்நடை, பயிர்கள் போன்றவைகளுக்கு வரிகள் வசூலிக்கப்படுகின்றன.

மேலும் சிகரெட் பிடித்தல், தவறான முறையில் நாகரீக உடை அணிதல் போன்றவைகளுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோன்று ஆண்டுக்கு ரூ.6500 கோடி நிதி திரட்டுகின்றனர்.

காலையில் சண்டையில் ஈடுபடும் இவர்கள் மாலையில் வரி வசூலில் ஈடுபடுகின்றனர். இவை தவிர எண்ணெய் கடத்தல், வங்கிகளில் கொள்ளையடித்தல், வெளிநாட்டினரை கடத்தி பிணைத்தொகை வசூலித்தல், வளைகுடா நாடுகளில் பணக்காரர்களிடம் இருந்து நன்கொடை வசூலித்தல் மூலம் நிதி திரட்டப்படுகிறது. பாரீஸ் மீது தாக்குதல் நடத்திய பிறகு ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை அமெரிக்கா, ரஷியா மற்றும் பிரான்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

இவர்களது 116 எண்ணெய் கடத்தல் லாரிகள் மீது குண்டு வீசி அழித்தது. மேலும் தாக்குதல் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகளால் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.