ஐ.பி.எல். : 2 புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டி !

IPL_2011_IPL_Logo_IPL_Teams_freecomputerdesktopwallpaper_1600

 

 ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு லோதா கமிட்டி 2 ஆண்டு தடை விதித்தது.

இதனால் 2016 மற்றும் 2017–ம் ஆண்டுகளில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இந்த 2 அணிகளும் விளையாட முடியாது.

இந்த அணிகளுக்கு பதிலாக 2 புதிய அணிகளை இரண்டு ஆண்டுக்கு மட்டும் ஏலத்தில் எடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்கான அடிப்படை விலை ரூ.40 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்காக 9 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. கொச்சி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

புதிய ஐ.பி.எல். அணிகளுக்கான நடைமுறை கடந்த 16–ந்தேதி தொடங்கியது. அணிகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றன. டெண்டர் நடைமுறைகளை நேற்றுடன் முடிவடைந்தன.

10 முதல் 12 நிறுவனங்கள் டெண்டர் படிவங்களை பெற்றுள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். சென்னையை சேர்ந்த செட்டிநாடு குரூப், ஐ.டி.ஐ மற்றும் ரோனி, ஸ்க்டூஹலாவின் யூனிலேசர், வீடியோகான், குரூப் எம், இன்டெக்ஸ் மொபைல், ஹால்டிராம், யெஸ் பேங்க், சஞ்சீவ் கோயங்காகுரூப், ஆர்.பி.ஜி குரூப் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை வாங்கியுள்ளன.

இதனால் 2 புதிய அணிகளை ஏலத்தில் எடுக்க 12 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன.

2 புதிய ஐ.பி.எல். அணிகள் குறித்த விவரம் வருகிற 8–ந்தேதி தெரியும். அன்றைய தினம் தான் புதிய அணிகள் குறித்த ஏலம் நடக்கிறது.