ஹபுகஸ்தலாவை குடிநீர் வழங்கள் திட்டத்தினூடு 17 கிராம சேவகர் பிரிவுகளின் குடிநீர்த் தேவை நிறைவு செய்யப்படவுள்ளது !

ஹபுகஸ்தலாவை குடிநீர் வழங்கள் திட்டத்தினூடு கொத்மலைத் தேர்தல் தொகுதி திஸ்பனே கோரலைக்குட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளின் குடிநீர்த் தேவை நிறைவு செய்யப்படவுள்ளது.

naeemulah_Fotor
அமைச்சர், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கமைய கடந்த சில மாதங்களாக  மாகாண நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபைப் பொறியியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு மற்றும் சாத்தியவள ஆய்வுப் பணிகள் மு கா உதவித் தவிசாளர் M.நயீமுல்லாஹ் அவர்களின் வழிகாட்டலில் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

 

naeemullah 1
டிசம்பர் மாத இறுதியில் மேற்படி திட்டம் தொடர்பான தெளிவூட்டல் கூட்டமொன்று தேசிய நீர் வழங்கள் அதிகார சைபயினால் ஹபுகஸ்தலாவையில் நடாத்தப்படும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹபுகஸ்தலாவை மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களை மாத்திரம் உள்ளடக்கியதாக வெளிநாட்டு முதலீடொன்றினை மையமாக வைத்து மதிப்பீடு செய்யப்பட்ட நிர்வழங்கள் திட்டமொன்று போதிய நீரூற்று வசதிகள் இன்மையாலும், பயனாளிகளின் தொகை போதாமையினாலும் கைவிடப்பட்டது.

naeemulllah 2
அத்தகைய நிலைமைகள் ஏற்படாத வகையில் தற்போதைய திட்டமானது ‘குயின்ஸ்பெறி’ மலைச் சாரலில் ஊடறுத்துப் பாயும் சிற்றாறு ஒன்றிலிருந்து பெறப்படுவதோடு குயின்ஸ்பெறி தொடக்கம் ஹபுகஸ்தலாவை வரையிலான மேலும் சில பகுதிகளுக்கும் வழங்கப்படவுள்ளதால் பயனாளிகளின் தொகை அதிகரிப்பதோடு வெற்றிகரமான குடிநீர் வழங்கள் திட்டமாகவும் அமையவுள்ளது.
ஹபுகஸ்தலாவை,ஹல்கொல்ல,அஹஸ்வெவ,பஹலகொரகோய,பொல்வதுர,இஹலகொரகோய,டொன்சைட் கிராம மக்கள் மேற்படி திட்த்தினூடு பெரிதும் பயனடைவர்