விளாடிமிர் புதினின் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. காரில் குண்டு வெடித்து கணவருடன் பலி !

ரஷியாவைச் சேர்ந்த பெண் எம்.பி. ஓகாசனா போப்ரோவ்ஸ் கயா (30). இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஐக்கிய ரஷியா கட்சியைச் சேர்ந்தவர். இவரது கணவர் நிகிதா போப் ரோஸ்கி. இவர் முன்னாள் ராணுவ சிறப்பு சேவை அதிகாரி.

russiyan mp

இவர்கள் செர்பியாவில் உள்ள நொவோசி பிர்ஸ்க் என்ற இடத்தில் தங்கியிருந்தனர்.

சம்பவத்தன்று நொவோ சிர்ஸ்க் நகரில் இவர்கள் இருவரும் சென்ற காரில் திடீரென குண்டு வெடித்தது. அதில், ஓகாசனா எம்.பி.யும், அவரது கணவர் நிகிதாவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்களது பிணங்கள் மீட்கப்பட்டன. ஓகாசனா எம்.பி.யில் முகம் கருகி சிதைந்த நிலையில் இருந்தது.

மேலும், கணவன்– மனைவி இருவரின் உடல்களும் காரின் பின் இருக்கையில் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டன. எனவே இவர்கள் காருக்குள் செக்ஸ்சில் ஈடுபட்டபோது குண்டு வெடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதை போலீசாரும் உறுதி செய்தனர். இச்சம்பவத்துக்கு பெண் எம்.பி.யின் கணவர் நிமுதாவே காரணம் என கூறியுள்ளனர். ஏனெனில் இவர் கையில் வெடிகுண்டை வெடிக்க செய்யும் வயர் இருந்தது.

கணவன்–மனைவிக்கு இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் பெண் எம்.பி. ஓகாசனாவை காரில் அழைத்து வந்து வெடி குண்டை காட்டி மிரட்டி கட்டாயப்படுத்தி செக்ஸ்சில் அவரது கணவர் ஈடுபட்டிருக்கலாம். அப்போது அவர் குண்டை வெடிக்க செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

நொவோசிபிர்ஸ்க் நகர மேயர் இதுகுறித்து கூறும் போது, ‘‘ஓகாசனா எம்.பி.க்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப சண்டை இருந்தது. அந்த தகராறில் கணவர் நிகிதா குண்டை வெடிக்க செய்துள்ளார் என தெரிவித்தார்.