மும்பைக்கு 2-வது துறைமுகம் : வெள்ளிக்கிழமை அடிக்கல் நட்டுவிழா !

 mumbai-india

இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் 2-வது துறைமுகம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய துறைமுகமானது டாடா பவர் நிறுவனத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குவதறகு பெரும்பாலும் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது மும்பை போர்ட் டிரஸ்ட் வழியாக இந்த நிலக்கரி இறக்கப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக, 8 மில்லியன் டன்கள் அளவுக்கு நிலக்கரி, ஸ்டீல், சிமெண்ட் ஆகியவைகளை கையாளும் வகையில் இந்த துறைமுகம் கட்டமைக்கப்படுகிறது.

நகராட்சி எல்லைகளுக்குள் இந்த துறைமுகத்தை கட்டுவதற்காக யோகயாதன் குழுமம் ரூ.250 கோடியை முதலீடு செய்ய உள்ளதாகவும்,  மான்குர்த் அருகே அமையவுள்ள இந்த புதிய துறைமுகமானது அடுத்த 3 மாதங்களில் செயல்பட துவங்கும் எனவும் அந்நிறுவனத்தின் தலைவர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை-புனே நெடுஞ்சாலையை எளிதில் சென்றடையும் வகையிலும், மார்குர்த் ஸ்டேசன் ஹார்பர் லைனில் இருந்து ரெயில் போக்குவரத்து இருக்கும் வகையிலும் புதிய துறைமுகத்தை உருவாக்க யோகயாதன் குழுமம் 10 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.

இந்த புதிய துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதில், மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.