பாரிசில் நடைபெற்று வரும் பருவநிலை மாற்ற மாநாட்டில் இந்திய அரங்கை திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது ,
பருவநிலை மாற்றம் உலகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. பருவநிலை மாற்றத்தின் விளைவை இந்தியாவில் நாங்கள் உணர்கிறோம். இதனால் ஏற்படும் கடும் விளைவுகளை வளர்ந்து வரும் நாடுகளே அதிக அளவில் சந்திக்கின்றன.
இந்த விஷயத்தில் உலக நாடுகள் விரைந்து செயல்பட வேண்டும். பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண்பதில் இந்தியா முன்னால் நிற்கவேண்டும். நமது நடவடிக்கைகள் எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதாக இருக்க வேண்டும். எனவே, இந்த மாநாட்டில் நடுநிலையான, நீடித்த ஒரு ஒப்பந்தம் தேவை. இங்கு எடுக்கப்படும் முடிவு மிகவும் முக்கியமானது.
இவ்வாறு அவர் பேசினார்.