பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய இந்த மாநாடு நாளை வரை நடைபெறுகிறது.
இதில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள் மாநாட்டிற்கிடையில் சந்தித்துக்கொண்டனர். இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். அதேபோல் அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
ஆனால், புதின் துருக்கி அதிபர் எர்டோகனை சந்திக்க மறுத்துவிட்டார். சமீபத்தில் ஜெட் விமானத்தை துருக்கி விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அதன்பிறகு இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால்தான் புதின் துருக்கி அதிபரை சந்திக்க மறுத்து விட்டார்.
ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் மூலம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துருக்கி அரசுக்கு புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.