வங்காள தேசத்தில் அரசியல் கட்சித் தலைவர் கொலை வழக்கில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 11 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
அவாமி ஜூபா லீக்கின் கபாசியா பிரிவின் முன்னாள் தலைவர் ஜலாலுதீன் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி தூக்கிலிட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கூடுதல் மாவட்டம் மற்றும் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி பசில் எலாகி புயிய்யான் 11 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
தண்டனை பெற்றதில் பெரும்பாலானோர் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் தேசியவாத கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தண்டனைப் பெற்றவர்களில் 6 பேர் ஜெயிலில் உள்ளனர். 5 பேர் இன்னும் பிடிபடாமல் உள்ளனர்.
இந்த தண்டனையை எதிர்த்து 7 நாட்களுக்கும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.