அமைச்சர் ஏ.எச். ஏம். பௌசியுடன் கனேடிய தூதுவர் சந்திப்பு !

அஷ்ரப் ஏ சமத்

இனங்களுக்கிடையிலான நல்லுரவை வளர்க்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கு அமைய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இன ஒருமைப்பாட்டுக்கு பொறுப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஏ.எச். ஏம். பௌசி தெரிவித்தார்.

01_Fotor
கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் உள்ள இன ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சில் கணடிய தூதுக்குழுவை இன்று(30)ஆம் திகதி சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் கணடிய தூதுவர் செலிவைட்டிஸ், கணடிய வெளிவுர அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் பயாஸ் மன்ஜி, வெளிநாட்டு அலுவல்கள் சர்வதேசப் பிரிவின் தெற்காசிய நாடுகளுக்கான அதிகாரி ஜாவத் குரைசி, உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.
இன ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஏ. கணேசமூர்த்தியும் அங்கு பிரசண்னமாகி இருந்தார்.
நாட்டில் வாழும் சகல இனங்களையும் பாடசாலை மட்டத்தில் இன ஜக்கியத்தை உருவாக்கும் வகையில் மதரீதியான பினக்குகளை தீர்த்துவைத்தல் ;;போன்ற பல இன ஜக்கிய செயற்பாடுகள் குறித்து கணடிய அதிகாரிகளிடம் விள்க்கி கூறப்பட்டது.

02_Fotor