குறைபாடுகளை நிவர்த்திசெய்யக்கோரி சுகாதார பிரதி அமைச்சரிடம் மகஜர் கையளிப்பு !

அபு அலா 

அட்டாளைச்சேனை, பாலமுனை ஹோமியோபதி மத்திய சிகிச்சை நிலையத்தின் மிக நீண்டநாள் தேவையாகளையும், குறைபாடுகளை சுட்டிக்காட்டிய மகஜர் ஒன்றை பொது அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் ஸம்சுல் மக்கீன் ஜலீலினால் பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீமிடம் இன்று திங்கட்கிழமை (30) மாலை வாசித்து கையளித்துவைத்தார்.

அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

DSCN4499_Fotor

கிழக்கு மாகாணத்தில் ஹோமியோபதி மத்திய சிகிச்சை நிலையம் இரண்டு மாத்திரமே உள்ளது. அதில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் மற்றயது அம்பாறை மாவட்டத்தில் எமது பிரதேசமான பாலமுனை ஹூசைனியா நகரில் அமைந்துள்ளது. இங்கு அமையப்பெற்ற சிகிச்சை நிலையத்தில் நாளாந்தம் சுமார் 100 மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வருகை தருகின்றனர்.

ஆனால்,  இந்த நிலையத்தில் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டுவருகின்றனர். இங்கு காணப்படுகின்ற குறைபாடுகளாவன,

01.வெளிநோயாளர்கள் பிரிவு, விடுதி மற்றும் நிர்வாகப்புரிவு வசதிகளைக்கொண்ட இரண்டுமாடி புதிய கட்ட்டம் ஒன்று அமைத்துத்தரவேண்டும்.

02.   தட்டுப்பாடற்ற மருந்து விநியோகத்தினை உறுதிசெய்யவேண்டும்.

03.   நோயளர்களுக்கான மலசலகூடம் அமைத்துத்தரவேண்டும்

04.   நோயளர்கள் காத்திருப்புக்கான தற்காலிக கட்ட்டம் அமைத்துத்தரவேண்டும்

05.   சிகிச்சை பெறவருகின்ற நோயளர்களுக்கு கதிரைகள்  வழங்கவேண்டும்.

06.   சுற்றுமதில் அமைத்துத்தரவேண்டும்.

07.   தொண்டர்களாக கடமையாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்கித் தரவேண்டும்.

08.   மேலதிகமாக ஆளணியினரை உறுவாக்கி நியமித்தல்வேண்டும்.

என்ற 08 கோரிக்கைகளையும் முன்வைத்து இக்குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திசெய்யும் வகையில் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வேண்டி பாலமுனை பொது அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் ஸம்சுல் மக்கீன் ஜலீலினால் முன்வைத்து பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசீமிடம் கையளித்து வைக்கப்பட்டது.

இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.