பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்ட காத்தான்குடி அந் நாஸர் வித்தியாலத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களை வீதி விபத்தில் இருந்து தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு மஞ்சல் கடவை உட்பட மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வு 29-11-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை அந் நாஸர் வித்தியாலத்தின் தொழினுட்ப ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.
அந் நாஸர் வித்தியாலத்தின் அதிபர் எம்.ஏ.அல்லாபிச்சை தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள்,ஆசிரியர்கள்,மாணவர் கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.திலங்க துஷார ஜெயலால் மற்றும் பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஆர்.மயூரன் ஆகியோரினால் மாணவர்களுக்கு மஞ்சல் கடவை உட்பட மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் அந்நாஸர் வித்தியாலத்திற்கு முன்பாகவுள்ள மஞ்சல் கடவையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் மாணவர்களை மஞ்சல் கடவை ஊடாக கடக்க வைக்கும் செய்முறை பயிற்சியும் வழங்கப்பட்டது.
மேற்படி செயலமர்வில் மஞ்சல் கடவையில் எவ்வாறு மாணவர்களை கடக்க வைப்பது,மஞ்சல் கடவையில் மாணவர்கள் கடக்க முற்படும் போது ஏற்படும் வீதி விபத்துக்களை எவ்வாறு தடுப்பது, மஞ்சல் கடவையில் மாணவர்களை கடக்க வைக்கும் வீதியில் செல்லும் வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது அதன் பின்னர் எவ்வாறு வாகனங்கை செய்கை மூலம் போக வைப்பது போன்ற விடயங்கள் தொடர்பிலும், மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம் தொடர்பிலும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.