யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியா 6.6 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கவுள்ளது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மோல்ட்டாவில் வைத்து சந்தித்துள்ளார்.
இதன்போது பிரதமர் கெம்ரன் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மீளவும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களின் சார்பில் நிற்பதற்கு பிரித்தானியா அர்ப்பணிப்புடன் உள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே இந்த நிதி வழங்கப்படுகிறது.