ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2016ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்துள்ளார்.
வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளை இணைத்து, தேசிய அரசாங்கமொன்றை அமைத்துள்ளதற்காக இந்த விருது வழங்கப்படலாம் எனவும் நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சர்வதேச ரீதியில் பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தடை செய்யப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை அடுத்த வருடம் மீண்டும் கிடைக்கவுள்ளது எனவும் தெரிவித்தார்.