சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு 7 மணிக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விருந்துக்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த அழைப்பை அவர்கள் இருவரும் ஏற்றனர்.
அவர்கள் தேநீர் விருந்தில் பங்கேற்க வந்தபோது அவர்களை பிரதமர் மோடி, வீட்டு வாசலுக்கு வந்து வரவேற்றார். அவர்களுடன் சாதாரண முறையில் கலந்துரையாடினார்.
எதிர்க்கட்சி தலைவர்களை பிரதமர் மோடி தனது இல்லத்துக்கு அழைத்து வரவேற்று பேசியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.