சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டிட்ட டிராபிக் ராமசாமி, சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்த டி.சுரேஷ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரிக்கிறார். இந்த மனுவுக்கான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உள்பட 31 பேருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பதில்மனு தாக்கல் செய்வதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் பல பிரதிவாதிகள் சார்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை டிசம்பர் 11-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.