இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நாக்பூர் டெஸ்டில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
இந்த தொடரில் மூன்று ஆடுகளமும் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்க சாதகமாக இருந்தது. தென்ஆப்பிரிக்காவின் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணமாக இருந்தது.
இந்த தொடரை இழந்தது குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் அம்லா கூறுகையில் ‘‘இந்த சூழ்நிலையில் நாங்கள் விளையாடியதற்காக நாங்கள் கொஞ்சம் நிம்மதி அடையலாம். இதுபோன்ற ஆடுகளத்தில் நாங்கள் இதற்கு முன் விளையாடிய அனுபவம் எங்களுக்கு இல்லை.
என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற ஆடுகளத்தில் வெளிநாட்டு மண்ணில் விளையாடியதில்லை. இதனால் கொஞ்சம் நிம்மதி. ஏனென்றால் இது மிகவும் சவாலான போட்டி. நாங்கள் இதற்கு முன் இதுபோன்ற சவாலை சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது’’ என்றார்.