இங்கிலாந்திற்கு அதிகளவில் புலம்பெயர்ந்து செல்வதில் யாருக்கு முதலிடம் தெரியுமா?

UK-Border-Agency-passport-sign-595468

 மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போரால் அதிக அளவிளான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகிறார்கள். 

ஆனால் ஐரோப்பிய யுனியனின் முக்கிய உறுப்பு நாடான இங்கிலாந்தும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்து வரும் மக்களால் என்ன செய்வது என்று தெரியால் திணறி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை இங்கிலாந்திற்கு 636000 பேர் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். 

இவர்களில் ஐரோப்பிய யுனியன் நாடுகளில் இருந்து மட்டும் 265,000 பேர் வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ருமேனியா, பல்கேரியாவை சேர்ந்தவர்கள். 

தனித்தனி நாடுகளாக பார்க்கும் போது 2014-ம் ஆண்டில் இங்கிலாந்திற்கு அதிக புலம்பெயர்ந்தவர்களில் எண்ணிகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 45,000 இந்தியர்கள் இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். இரண்டாவது இடத்தில் சீனாவும், மூன்றாவது இடத்தில் ருமேனியா உள்ளது. 

இங்கிலாந்திற்கு புலம்பெயர்ந்து செல்வதற்கான முக்கியகாரணமாக வேலை வாய்ப்புகள் உள்ளன.