வட ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் நடத்திய பேரணியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு நைஜீரியாவின் கனோ நகரில் நடைபெற்ற பேரணியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். வெடிகுண்டுகளுடன் வந்த நபர் பேரணிக்குள் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர். தங்கள் ஊர்வலத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக பேரணியை தலைமை தாங்கி நடத்திய முகமது தூரி கூறினார்.
மேலும், ”இந்த தாக்குதல் எங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை. நாடு முழுவதும் இதே நிலைமை தான் நிலவி வருகிறது.” என்றும் முகமது தூரி தெரிவித்தார்.
நைஜீரியாவில் 10 வயது சிறுமி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.