வை–பைக்கு மாற்றாக வருகிறது லை–பை !

lifi logo image

lifi logo image

 இணைய தளத்தில் வயர் இணைப்பு இல்லாமல் பயன்படுத்துவதற்காக ‘வை–பை’ என்ற தொழில் நுட்பம் உள்ளது. இதை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை வயர் இணைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர், செல்போன், லேப்–டாப், லேப்லெட் போன்ற சாதனங்களில் இணையதள வசதிகளை பெற முடியும். ஆனாலும் ‘வை–பை’ மூலம் தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு கஷ்டமாக இருக்கும்.

தற்போது வை–பையை விட 100 மடங்கு சக்தி கொண்ட தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதற்கு ‘லை–பை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வை–பையில் 1 ஜி.பி. தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அதை விட 100–ல் 1 மடங்குதான் லை–பை நேரம் எடுத்துக் கொள்கிறது. தகவல் தொழில் நுட்பத்தில் லை–பை புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.