சட்டவிரோத மின்சாரப் பயன்பாட்டினால் மின்சார சபைக்கு நட்டம் !

leckymeter-460x276

 கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களில் சட்டவிரோத மின்சாரப் பயன்பாடு தொடர்பாக 405 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

மின்சார சபை அதிகாரிகளினால் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களின் போது இவை கண்டறியப்பட்டதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

மின் வாசிப்பு மானியில் பல்வேறு முறைகேடுகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக மின்சாரம் பயன்படுத்துவது தொடர்பில் இதன்போது தெரியவந்துள்ளது. 

இதன் காரணமாக மின்சார சபைக்கு பாரிய இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தி மின்சார சபைக்கு நட்டத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்டநடிக்கை எடுப்பதற்காக தொடர்ந்து சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.