ஐ.எஸ் மீது இங்கிலாந்து தாக்குதல் நடத்த வேண்டும் : மந்திரிகளை சம்மதிக்க கேம்ரூன் முயற்சி !

ஐ.எஸ் தீவிரவாதிகளின் இஸ்லாமிய தேசம் மீது இங்கிலாந்து மீண்டும் வான்வெளி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இதற்காக இங்கிலாந்து மந்திரிகளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். 

david cameron
பாரிஸ் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டத்தை அடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது கூட்டுத் தாக்குதல் நடத்த முக்கிய நாடுகளுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே இரு தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். மேலும் ஒபாமா மற்றும் ஹாலண்டே இங்கிலாந்திற்கு தங்களை அழைப்பையும் விடுத்தனர். 

இந்நிலையில் தங்களது நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான தாக்குதலில் இணைய வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தியுள்ளார். 

”பாரிஸ் சம்பவத்தையடுத்து இந்த தாக்குதலுக்கு புதிய உடனடி தேவை உருவாகியுள்ளதாகவும், நாம் இந்த கூட்டு நடவடிக்கையில் இணையவில்லை என்றால் ‘இப்போது இல்லை என்றால் எப்போது’ என்று நமது நட்பு நாடுகள் கேள்வி எழுப்பும்” என்றும் அவர் கூறினார். 

முன்னதாக, ஐ.எஸ் மீது மீண்டும் வான்வெளி தாக்குதல் நடத்துவதற்காக கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மந்திரிகள் மத்தியில் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=Iycnwo_cpFY